விஜயின் நீலாங்கரை வீட்டுக்கு முன்னால் நின்று CCTஐ பார்த்து அழுத மாணவி

Spread the love

நடிகர் விஜய் வீட்டு முன் இருந்த சிசிடிவி கேமரா முன் பள்ளி மாணவி ஒருவர் நின்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நடிகர் விஜய்க்கு சிறுவர் முதல் பெரியவர் வரை லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு என்பது தெரிந்ததே. ரசிகர்கள் பலர் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்று அவரது வீட்டுக்கு வருவது வழக்கமாக உள்ளது,

அந்த வகையில் தமிழ் செல்வி என்ற பள்ளி மாணவி ஒருவர் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அவரது வீட்டிற்கு சென்றார். ஆனால் அவரது வீடு பூட்டி இருந்ததை அடுத்து தனது கோரிக்கையை விஜய் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா முன் கண்ணீர் மல்க வைத்தார்.

உங்கள் வீட்டின் முன் உங்களை பார்க்க வேண்டும் என்று காத்திருக்கிறேன், நீங்கள் என்னை வீட்டுக்குள் அழைப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்று அவர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி மகளான இவர் சுற்றுலா வந்த நிலையில் விஜய் வீட்டின் முன் இருந்த சிசிடிவி முன் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் செல்வி மட்டுமின்றி அவரது குடும்பமே விஜயின் ரசிகர்கள் என்ற நிலையில் இந்த வீடியோவை விஜய் பார்த்து தமிழ் செல்வியையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.