பிரபல நடிகையின் மீது ஆசை கொண்ட மாணவன்….. மேடையில் மக்கள் முன்னிலையில் நடந்த அசிங்கமான செயல்!!!

Spread the love

இந்தியாவின் பிரபல முன்னணி மலையாள நடிகையாக நடிகையாக வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி, இவர் தமிழ் சினிமாவில் 08 தோட்டாக்கள் என்ற படத்தில் முதலில் அறிமுகமானதுடன் தொடர்ந்து சூரரைப் போற்று படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக நடித்துத் தமிழ் சினிமாவில் பிரபல்யமானார். இப்படத்தில் நடித்தமைக்காக இவருக்குச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினையும் தட்டிச் சென்றார், தொடரந்து இவருக்கான படவாய்ப்புக்கள் குவிந்துள்ளதால் அதில் வித்தியாசமான கதையம்சங்களைக் கொண்ட படங்களில் நடித்து வருகின்றார்.

சஹீத் அபராத் இயக்கத்தில் இவர் மலையாளத்தில் நடித்துள்ள மிகப் பிரமாண்டமான தங்கம் திரைப்படம் எதிர்வரும் 26 ஆம் திகதி வெளிவரவுள்ள நிலையில் இப்படத்திற்கான புரமோஷன் நேற்று நடைபெற்றது. இதில் சட்டக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் அதில் திடீரென மேடையில் ஏறிய ஒரு மாணவன்குறித்த நடிகையின் கையினைப் பிடித்து இழுத்து பூக்கொடுத்ததுடன் அவரது தோள்மீது கையை விட்டார், இதனை எதிர்பாராத அபர்ணா அவரது கையைத் தட்டிவிட்டதுடன் மீண்டும் மேடையில் அமர்ந்ததுடன் மீண்டும் அந்த மாணவன் மண்ணிப்புக் கேட்டுக் கைகொடுக்க அதனை மறுத்துவிட்டார். இச்சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.