ஆச்சி மனோரமாவின் மகனா இது? அழகிய குடும்ப புகைப்படம் இதோ!

ஆச்சி மனோரமாவின் மகனா இது? அழகிய குடும்ப புகைப்படம் இதோ!

சினிமாவை பொறுத்தவரை கதாநாயகிகள் என்றால் அவர்களது இளமையும் வயதும் இருக்கும் வரை தான் அவர்களுக்கு மார்க்கெட் இருக்கும். வயது இளமையும் குறைந்துவிட்டால் அவர்களின் மார்க்கெட் தானாகவே சரிந்துவிடும். அவருக்கு பின்னால் பல்வேறு இளம் நடிகைகள் வந்து விடுவார்கள். இவர்களுக்கு தானாகவே எவ்வளவு திறமை இருந்தாலும் மார்க்கெட் சரிந்து விடும் புது நடிகைகளின் அழகையும் அவர்களின் கவர்ச்சியும் பார்க்க தான் மக்கள் திரையரங்கிற்கு ஓடுவார்கள்.

ஹீரோயின்களுக்கு இப்படி இருக்கும்போது காமெடி நடிகைகளுக்கு இந்த வரையறையே இல்லை. எந்த காலகட்டத்தில் வேண்டுமானாலும் அவர்களது காமெடியும், அவரது பாடி லாங்குவேஜும், அவரது டயலாக் டெலிவிரியும் சிறப்பாக இருந்தால் அவர்கள் எந்த காலத்திலும் ஜொலித்துக் கொண்டிருப்பார்கள் என்பதற்கு முக்கிய உதாரணமாக இருந்தவர் ஆட்சி மனோரமா .

இவர் 1950 கலி சினிமாவில் நடிக்க ஆரம்பித்து கோலிவுட் சினிமாவையும் தெலுங்கு சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வந்தார் என்று சொல்லலாம். குறிப்பாக இவரது ஒவ்வொரு திரைப்படங்களிலும் ஹீரோ ஹீரோயினுக்கு நிகராக இவரது காமெடி கதாபாத்திரங்கள் பேசப்படும். அந்த அளவுக்கு இவர் மிகவும் புகழ்பெற்ற நடிகையாக கோலிவுட் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். ஆச்சி மனோரமா என்ன மக்கள் இவரை செல்லமாக அழைத்து வந்தார்கள்.

தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்த மனோரமா திரையில் வந்து நின்றாலே கலகலவென சிரிப்பொலியால் அதிரும் திரையரங்கம் என்று சொல்லும் அளவிற்கு நகைச்சுவையில் ஆண்களையே மிஞ்சி எகிறி அடித்தவர் நடிகை மனோரமா. பெண்களாலும் இப்படி நடிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டி தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் என பல்வேறு விருதுகளை சினிமாவில் நடித்துக் கொண்டே பெற்றவர் ஆச்சி மனோரமா.

சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் நாடக குழுவில் நடித்துக் கொண்டிருந்த இவர் அந்த குழுவில் இருந்த எஸ் எம் ராமநாதன் என்பவரை காதலித்து 1964 திருமணம் செய்து கொண்டார். 2015ல் இவர் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவு ஒட்டுமொத்த திரையுலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது. இந்நிலையில் நடிகை மனோரமாவுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் பெயர் பூபதி. மகன் மற்றும் குடும்பத்தினருடன் மனோரமா பல வருடத்திற்கு முன்னர் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.