இந்த வாரம் வெளியாகவுள்ள ‘ஆடு ஜீவிதம்’.. திடீரென ஏற்பட்ட பெரும் சோகம்..!

இந்த வாரம் வெளியாகவுள்ள ‘ஆடு ஜீவிதம்’.. திடீரென ஏற்பட்ட பெரும் சோகம்..!

‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் உண்மை கதையில் வரும் நஜீப் என்பவரின் பேத்தி எதிர்பாராத வகையில் காலமாகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் உள்ள நஜீப் என்பவர் அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்ற போது அவர் அங்கு ஒட்டகங்கள் மேய்க்கும் அடிமையாக கொடுமைப்படுத்தப்பட்டார் என்பதும் அவர் அங்கிருந்து தப்பித்து கேரளா வந்த நிலையில் தான் ஒரு எழுத்தாளர் அவரைப் பற்றி கேள்விப்பட்டு அவருடைய முழு கதையையும் கேட்டு ‘ஆடு ஜீவிதம்’ என்ற கதையை எழுதினார்.

கேரளாவில் மிக அதிகமாக விற்பனையான புத்தகம் ‘ஆடு ஜீவிதம்’ என்பதும் இதே பெயரில் தான் இயக்குனர் பிளஸ்ஸி என்பவர் இந்த நாவலை படமாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பிரித்விராஜ் மற்றும் அமலாபால் நடித்துள்ள இந்த படம் வரும் 28-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ‘ஆடு ஜீவிதம்’ கதையின் உண்மை கேரக்டரான நஜிப் என்பவரின் பேத்தி சுவாச கோளாறு காரணமாக இன்று உயிர் இழந்தது. பிறந்து சில மாதங்களே ஆகியுள்ள இந்த குழந்தை உயிரிழந்த நிலையில் அவரது தந்தை தற்போது மஸ்கட்டில் வேலை பார்த்து வருவதாகவும் அவருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது