
லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிசினஸ் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை குறித்த தகவல் வெளியாகி உள்ளன.
‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வெளிநாட்டில் லைகா நிறுவனம் சொந்தமாகவே ரிலீஸ் செய்ய அதிரடி முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அஜித்தின் ’துணிவு’ திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்ற லைகா நிறுவனம் அந்த படத்தை மிகவும் பிரமாண்டமாக புரமோஷன் செய்து மிகப்பெரிய லாபம் பெற்றது.
’துணிவு’ படம் கொடுத்த உற்சாகம் காரணமாக தற்போது ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தை சொந்தமாக லைகா நிறுவனம் வெளிநாடுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளிலும் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


