மூளையில் ஆப்ரேஷனா? யாரு சொன்னது? மகனின் பள்ளி விழாவில் பங்கேற்ற அஜித்!

மூளையில் ஆப்ரேஷனா? யாரு சொன்னது? மகனின் பள்ளி விழாவில் பங்கேற்ற அஜித்!

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்ததால் ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.இந்த படம் சில பல பிரச்சனைகள் சந்தித்து வந்தது. ஆரம்பத்தில் விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்குவதாக இருந்தார்.

அதன்பின் அவரின் கதை சரியில்லை என கூறிவிட்டு அவரை தூக்கிவிட்டு மகிழ்ந்திருமேனி இயக்குனராக போட்டனர். அவரின் இயக்கத்தில் தான் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வந்தார். சில மாதங்கள் நடைபெற்று வந்த இந்த ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டது. காரணம் நிதி நெருக்கடியால் இந்த படத்தின் ஷூட்டிங் தொடர முடியவில்லை என்பதால் இப்படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.

அதன் பிறகு திரிஷா இப்படத்திலிருந்து விலகு போவதாக செய்திகள் வெளியானது. அதன் பின் அஜித் திரிஷாவிடம் சென்று பேசி சமரசம் செய்து மீண்டும் இப்படத்தில் நடிக்க வைத்ததாக செய்திகள் வெளியானது. காரணம் திரிஷா தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் அதிக பிஸியாக இருப்பதால் ஷூட்டிங் ஷெடியூல் தள்ளி போவதால் விடாமுயற்சி படத்திலிருந்து விலகிக் கொள்வதாக முடிவு எடுத்தார்.

இப்படி தொடர்ந்து பிரச்சனையிலிருந்து மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் தற்போது ஒரு அதிர்ச்சொலிக்க கூடிய விஷயம் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அதாவது அவருக்கு மூலையில் கட்டி இருப்பதாகவும். நான்கு மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த கட்டி நீக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிது. இருந்தாலும் இது வெறும் வதந்தி என்ற நடிகர் அஜித்குமார் நலமுடன் தான் இருக்கிறார் என்றும் சில ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இதில் சந்தேகம் என்னவெனில் சாதாரண செக்அப் என்றால் ஏன் பரபரப்பான செய்தியாக வெளியாகிறது.

அஜித் எத்தனையோ முறை செய்திருப்பார். அதெல்லாம் வெளியில் செய்தியாக வரவில்லையே என்கிற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது எனவே அஜித்துக்கு உண்மையிலேயே உடல் நலத்தில் பிரச்சனை ஏற்பட்டு அறுவை சிகிச்சை உண்மையிலேயே செய்யப்பட்டதா அல்லது இது வெறும் வதந்தியா என்பது இதுவரை தெளிவான விளக்கம் எதுவும் வெளிவரவில்லை. அஜித் பூரண குணமாகி வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்துனர். திரைத்துறையை சேர்ந்த பலர் அஜித்திற்கு குணமாக வேணி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர்.

இந்த விஷயம் காட்டுத்தீயென பரவிய நிலையில் தற்போது ஒரு இன்ப அதிர்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. அதாவது நடிகர் அஜித் தன் மகன் ஆத்விக்கின் பள்ளிக்கு விசிட் அடித்துள்ளார். ஆம், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி, இன்று அதிகாலை அஜித் வீடு திரும்பிய அஜித் தன்னுடைய மகன் ஆத்விக்கின் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மகனின் கால்பந்தாட்டத்தை பார்வையாளராக இருந்து ரசித்துள்ளார் அஜித். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளது. மேலும் சக நண்பர்கள் மற்றும் ஷாலினியுடன் கேஷுவலாக பேசும் அஜித்தையும் இந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. இதன் மூலம் அஜித் நலமாக இருப்பது உறுதியாகிவிட்டது. இதோ அந்த வீடியோ: