ஆத்தி… ஆர்யாவா இது? ஒரு வருஷத்துல முரட்டுத்தனமா மாறிட்டாரே – தீயாய் பரவும் போட்டோ!

ஆத்தி… ஆர்யாவா இது? ஒரு வருஷத்துல முரட்டுத்தனமா மாறிட்டாரே – தீயாய் பரவும் போட்டோ!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான கடந்த 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட 25க்கும் மேல்பட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரீட்சியமானார்.

இதனிடையே ஆர்யாவிற்கும் பிரபல பாலிவுட் நடிகையான சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆர்யாவின் கெரியரில் மிகமுக்கிய படங்களாக நான் கடவுள், மதராசபட்டினம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட திரைப்படங்கள் அமைந்தது. தொடர்ந்து அவர் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதனிடையே ஆர்யா எப்போது பிட்னெஸ் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது இன்ஸ்டா பக்கம் முழுவதும் ஒர்கவுட் போட்டோ மற்றும் வீடியோக்கள் தான் அதிகம் இருக்கும். ஜிம் ஒர்கவுட் , நீண்ட சைக்கிள் பயணம் என தனது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்துவார். அந்தவகையில் தற்போது, முரட்டுத்தனமாக உடலுடன் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார்.

ஆம் ஆர்யா தற்போது மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக கடந்த ஒரு வருடத்தில் தீவிர ஒர்கவுட் செய்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ள ஆர்யா, ‘2023 மார்ச்சில் Mr X படம் உறுதியானது. ஏப்ரல் மாதத்தில் இருந்து நான் இந்த லுக்கிற்காக உடற்பயிற்சி செய்ய தொடங்கினேன். தற்போது ஷூட்டிங் இறுதி கட்டத்தில் இருக்கிறது” என கூறி இருக்கிறார்.