நடிகர் மன்சூர் அலிகான் லியோ திரைப்படத்தில் நடிகை திரிஷாவுடன் நடிக்கும் போது அவருடன் கற்பழிப்பு காட்சி இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று பேசி இருந்தது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதன் காரணமாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு கடுமையான கண்டனங்கள் பிரபலங்களிடமிருந்தும் இணைய வட்டாரங்களில் பல தரப்பட்ட ரசிகர்களிடமிருந்தும் எழுந்து கொண்டிருக்கின்றது.
இது ஒரு பக்கம் இருக்க சின்ன நடிகர் என்பதால் தானே அனைவரும் மன்சூர் அலிகானை அடிக்கிறீர்கள். பெரிய நடிகர்கள் செய்த கூத்துக்களை பாருங்கள்… என்று முன்னணி நடிகர்களின் வண்டவாளங்களை தண்டவாளங்களில் ஏற்ற தொடங்கி இருக்கின்றனர் சில இணையவாசிகள்.
இதை மன்சூர் அலிகானுக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்பதை விடவும், ஒரு சிறிய நடிகர் பேசினால் அது பெரிய சர்ச்சையாகிறது.. பெரிய நடிகர் பேசினால் அதனை கடந்து போய் விடுகிறார்கள்.. என்ற ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடாகத்தான் இதனை பார்க்க முடிகிறது.

அந்த வகையில், முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் உள்ளிட்டோர் பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிலும் அதிகமாக நடிகர் விஜயின் பேச்சு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வேட்டைக்காரன் வெளியீட்டு விழாவில் நடிகை அனுஷ்காவின் அழகை வர்ணித்திருக்கிறார் நடிகர் விஜய்.
கடவுள் முருகன் பாடலின் வரிகளில் முருகா என்பதற்கு பதிலாக அனுஷ்கா என்று மாற்றி பாடியுள்ளார். அதாவது, “அழகென்ற சொல்லுக்கு அனுஷ்கா” என்று அந்த பாடல் வரிகளை மாற்றி பாடியிருக்கிறார்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது ஒன்றும் பெரிய பிரச்சினை கிடையாது.
ஆனால் நடிகர் சாம் ஒரு விஷயத்தை பதிவு செய்திருக்கிறார். அது தான் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த நான் திடீரென ஹீரோவாகிவிட்டேன்.
ஒருமுறை விஜய் சாரை பார்க்க சென்ற போது.. டேய் என்னடா முதல் படத்திலேயே இரண்டு சிம்ரன், ஜோதிகா என இரண்டு குதிரைகளோடு ஹீரோவா நடிச்சிட்டு இருக்க என்று கேட்டார்.
அப்பொழுது நீங்கள் சொல்வது போல தான் எல்லாம் மேல இருக்கவன் பண்றது என்று சொல்லிவிட்டு நகர்ந்து வந்தேன் என பேசி இருக்கிறார் ஷாம். இவருடைய இந்த பேச்சு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.