தொடர்ந்தும் லண்டனில் அப்பா அம்மாவுடன் தங்கியுள்ள சங்கீதா குடும்பப் பிரச்சனை தான் காரணமா ?

இந்த செய்தியை பகிர

 

தற்போதைய சூப்பர் ஸ்டார் என்று பலராலும் வர்ணிக்கப்படும் நடிகர் விஜய், திருமணம் செய்துகொண்டது ஒரு இலங்கைத் தமிழ் பெண்ணை. சங்கீதாவின் பெற்றோர் லண்டன் லூசிஹாம் என்னும் இடத்தில் வசித்து வருகிறார். சங்கீதாவின் அப்பா ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த லண்டன் தொழில் அதிபர். பின்னர் இளைப்பாறிவிட்டார். இந்த நிலையில், விஜய் நடித்த, மிகப்பிரம்மாண்டமான திரைப்படம் வாரிசு. இதன் இசை வெளியீட்டு விழாவுக்கு சங்கீதா வரவில்லை. அதுபோல பிள்ளைகளும் வரவில்லை. அவர் லண்டன் சென்றுவிட்டதாகச் செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

தனது பிள்ளைகளோடு லண்டன் வந்த சங்கீதா, லூசிஹாமில் தொடர்ந்தும் தங்கியுள்ளார். அவர் இதுவரை சென்னை செல்லவில்லை என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. அப்படி என்ன இருவருக்கும் இடையே பிணக்கு என்று கேட்டால். எல்லாம் ஒரு நடிகையால் தான் என்கிறார்கள். பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த, மற்றும் விஜயுடன் அடிக்கடி சில பல திரைப்படங்களில் நடித்த நடிகையோடு விஜய் தொடர்பில் இருக்கிறார் என்ற சந்தேகம் சங்கீதாவுக்கு இருக்கிறது. எல்லோரும் திருஷா என்று தான் முதலில் நினைத்தார்கள்.அது அப்படி அல்ல, சாட்சாத் கீர்த்தி சுரேஷ் தான். விஜய் கீர்த்தி சுரேஷ் நெருக்கமே சங்கீதாவின் பிரிவுக்கு காரணம்.

இதுவே நாளடைவில் அவர்கள் இடையே பெரும் விரிசலை உருவாக்கியுள்ளது என்ற பேச்சும் கசிந்துள்ளது.

சமீப காலமாக விஜய் கலந்துகொண்ட எந்த ஒரு நிகழ்ச்சியிலும் சங்கீதாவைக் காணமுடியவில்லை. அதுபோக விஜயின் மிக முக்கிய படமாகக் கருதப்படும் வாரிசு, அதன் இசைவெளியீட்டு விழாவுக்குக் கூட வராமல் லண்டன் செல்லும் அளவுக்கு, லண்டனில் எதுவும் நடக்கவில்லை. அவரின் பெற்றோர் நலமாகவே உள்ளார்கள். விஜய்க்கும் குறித்த நடிகைக்கும் என்ன தொடர்பு என்று மட்டும் எம்மைக் கேட்டு விடாதீர்கள். அது எல்லாம் பர்சனல் மேட்டர்….

 


இந்த செய்தியை பகிர