களற்றி விடும் விஜய் அவரே பெரும் குழப்பத்தில் இருக்கிறார் போல இருக்கே ?

களற்றி விடும் விஜய் அவரே பெரும் குழப்பத்தில் இருக்கிறார் போல இருக்கே ?

நம்ம தளபதி விஜய் ரெம்பவே குழப்பத்தில் இருக்கிறார் என்று கோடம்பாக்க வட்டாரத் தகவல் ஒன்று சொல்கிறது. அதாவது விஜய் தற்போது வெட்கட் பிரபுவின் இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பின்னர் தளபதி 69 என்ற படமே இறுதிப் படம் என்று விஜய் அறிவித்துவிட்டார். கார்த்திக் சுப்ராஜ் தளபதி 69 இயக்க உள்ளதாக அரசல் புரசலாக பேசப்பட்டு வரும் நிலையில். பல இயக்குனர்கள் விஜயை சந்தித்து வருகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் திட்டவட்டமாக தனது இறுதிப் படம் தளபதி 69 தான் என்று சொல்லிவிட்ட பின்னரும் அவர் ஏன் இயக்குனர்களை சந்திக்க வேண்டும் ?

ஆனால் அவர் தற்போது சந்தித்த 3 இயக்குனர்களும், தேர்தல் 2026 தானே வருகிறது. அதற்கு முன்னர் நீங்கள் ஒரு படம் நடிக்கலாமே என்று சொல்ல. ஓகே நீங்கள் வேறு ஒரு படத்தை பண்ணிவிட்டு வாருங்கள் பார்கமால் என்று விஜய் சொன்ன பதில், பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாம். அட இவர் என்ன சொல்ல வருகிறார் என்று இயக்குனர்களுக்கு புரியவில்லையாம். ஆனால் இது தொடர்பாக விசாரித்தால். தளபதி விஜய் அவர்கள் தற்போது மிகுந்த பக்குவப்பட்டு விட்டார். இப்போது அவர் யாருக்கும் NO சொல்லவ்தே இல்லை. மிகவும் நாகரீகமாக பேசிவிடுகிறார். இதனால் தான் நாசூக்காக, பதில் சொல்லி இருப்பார் என்கிறார்கள்.

மேலும் சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால், தளபதி விஜய்க்கு ஏகப்பட்ட பிரஷர் சார். அவர் படத்தில் நடிக்கிறார் இடை இடையே கட்சி கூட்டம், தேர்தலை எப்படி சந்திக்கப் போகிறோம் என்ற பிரஷர், பொதுக் குழு கூட்டம், அது இது என்று சொல்லி அவர் ஏகப்பட்ட அழுத்தத்தில் உள்ளார். அதனால் அவர் ரெம்பவே குழம்பிப் போய் உள்ளார் என்று மேலும் சிலர் சொல்கிறார்கள். ஒட்டு மொத்தத்தில் அரசியலுக்கு வந்தாலே பெரும் குழப்பம் தான். அது தளபதி விஜய்க்கும் தற்போது ஏற்பட்டுள்ளது போலத் தெரிகிறது.