விஜய்யின் காரை அடித்து நொறுக்கி ரசிகர்கள் வெறிச்செயல் – வைரலாகும் வீடியோ இதோ!

விஜய்யின் காரை அடித்து நொறுக்கி ரசிகர்கள் வெறிச்செயல் – வைரலாகும் வீடியோ இதோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தடுத்து படு பிசியாக நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

இதனிடையே விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். கட்சி வேலைகளிலும் படு பிஸியாக இருந்து வரும் விஜய் அதற்காக தனது ரசிகர்களை அரசியல் வேளைகளில் நியமித்து அவர்கள் மூலம் மக்களுக்கு தேவையான நல உதவிகளை செய்து மக்களின் நற்பெயரை சம்பாதித்து வருகிறார்.

தொடர்ந்து அடுத்தடுத்து அரசியலில் மும்முரமாக இறங்கி உள்ள விஜய் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்ததும் கடைசியாக ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்துவிட்டு அத்தோடு சினிமாவிற்கு டாட்டா காட்ட முடிவெடுத்துள்ளாராம். அந்த படத்தை அட்லீ இயக்க போகிறார் என அண்மையில் செய்தி வெளியாகியது. தற்போது GOAT படத்தின் படப்பிடிப்புகளில் விஜய் படு பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் GOAT படத்தின் ஷூட்டிங்கிற்காக கேரளாவிற்கு சென்ற விஜய்யை விமான நிலையத்தில் வரவேற்க பல ஆயிரம் ரசிகர்கள் கூடி இருந்தனர். விஜய்யை நேரில் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசையில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் கூடி இருந்தது.

அப்போது ரசிகர்கள் காரை சூழ்ந்து வந்து நெருக்கியத்தில் கண்ணாடி உடைந்து நொறுங்கி கார் அப்பளம் போல் நசுங்கிக்கிடக்கிறது. பின்னர் விஜய் ஏர்போர்ட்டில் இருந்து புறப்பட்ட கார் ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து தான் ஹோட்டல் வரை சென்று சேர்ந்தது. அந்த காரின் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதோ…