அந்த விஷயத்தில் கவனமா இருக்கிறேன் – ஐஸ்வர்யா மேனன் பளீச்!

அந்த விஷயத்தில் கவனமா இருக்கிறேன் – ஐஸ்வர்யா மேனன் பளீச்!

தென்னிந்திய சினிமாவில் படிப்படியாக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகையான ஐஸ்வர்யா மேனன் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் .

இதனிடையே அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காதால் சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்திருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பல விஷயங்களைப் பற்றி கூறிய ஐஸ்வர்யா மேனன்,

நடித்த எல்லா படங்களும் ஹிட் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், அது ரசிகர்கள் கையில் தான் இருக்கிறது. அவர்களுக்கு பிடித்தால் அந்த படம் வெற்றி அடையும். ஆகவே நான் கதைகளை தேர்வு செய்து தற்போது மிகவும் கவனமாக இருக்கேன். வித்தியாசமான கதைகள் எந்த மொழியில் இருந்து கிடைத்தாலும் விடமாட்டேன். தற்போது மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன் அது எனக்கு கிடைத்த பாக்கியம் என ஐஸ்வர்யா மேனன் கூறியிருக்கிறார்.