ஒரு நாளைக்கு சூர்யாவை கொடுங்க…. ரசிகைக்கு ஜோதிகாவின் தரமான பதில் – செம வைரல்!

ஒரு நாளைக்கு சூர்யாவை கொடுங்க…. ரசிகைக்கு ஜோதிகாவின் தரமான பதில் – செம வைரல்!

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடியாக வலம் வந்து கொண்டிருப்பவர் சூர்யா ஜோதிகா இவர்கள் இருவரும் திரைப்படங்களில் நடிக்கும் போது காதலிக்க ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக காக்க காக்க திரைப்படத்தில் தான் இவர்கள் காதல் பெருக்கெடுத்து ஓடியது என்றே சொல்லலாம்.

அந்த படத்தில் நிஜமாகவே அவர்கள் ரொமான்ஸ் காட்சிகளில் நெருக்கமாக நடித்து காதலித்து வந்தார்கள் என செய்திகள் வெளியாக்கியது. இவர்கள் இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் பல வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு மன நிம்மதியாக குடும்ப வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

ஜோதிகா குழந்தை பிறப்புக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பின்னர் மீண்டும் பிரேக் அதன் பின்னர் மீண்டும் பிரேக் உடைத்து தற்போது இரண்டாவது இன்னிசை தொடங்கி பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து அப்ளாஸ் வாங்கி வருகிறார் என்றே சொல்லலாம்.

இதற்கு சூர்யாவும் அவருக்கு சப்போர்ட் ஆக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் 2D என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்கள். சூர்யா ஜோதிகா என இருவரும் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்கள. இதை அவர்கள் குடும்பத்தோடு சென்று மும்பையில் செட்டில் ஆகிவிட்டனர். ஜோதிகா தற்போது மும்பையில் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகை ஜோதிகாவிடம்… சூர்யாவின் தீவிர ரசிகை ஒருவர், “சில்லுனு ஒரு காதல் படத்தில் ஐஷுவிற்காக சூர்யாவை ஒருநாள் விட்டுக்கொடுத்தது போல் எனக்கும் சூர்யாவை ஒரு நாள் தருவீர்களா? நான் கடந்த 16 வருடங்களாக அவரது தீவிர ரசிகையாக இருந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார். இதற்கு பதிலளித்த ஜோதிகா, “நோ அப்படியெல்லாம் கொடுக்கமாட்டேன்” என ரிப்ளை செய்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.