புருஷனை கைக்குள் போட்டுகொண்டு அந்த ஆசை நிறைவேற்றிக்கொள்ளும் காஜல் அகர்வால்!

புருஷனை கைக்குள் போட்டுகொண்டு அந்த ஆசை நிறைவேற்றிக்கொள்ளும் காஜல் அகர்வால்!

இந்திய சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால். மஹாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த இவர் பின்னர் தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் பழனி படத்தின் மூலமாக சில மாவில் அறிமுகமாகி அதன் பின்னர் மகதீரா படம் மாபெரும் வசூல் குவிக்க தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் காஜல் அகர்வாலுக்கு பல வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.

இவர் தமிழில் இதுவரை நான் மகான் அல்ல, சிங்கம் , மாற்றான்,துப்பாக்கி , ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி கவலை வேண்டாம், விவேகம் ,மெர்சல் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்திருக்கிறார்.

காஜல் அகர்வால் தொடர்ந்து டாப் நடிகையாக மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தபோதே கடந்த 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நீல் என்ற ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.

அவ்வப்போது மகனுடன் எடுத்துக் கொண்ட க்யூட்டான புகைப்படங்களை வெளியிடுவார்.குழந்தை பிறப்புக்குப் பிறகும் காஜல் அகர்வால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதற்கு அவரது கணவரும் முழு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் காஜல் அகர்வாலின் முழு சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

ஆடி ஏ4 – 43 லட்சம்

ரோவர் – 88.25 லட்சம்

ஸ்கோடா ஆக்டேவியா – 27 லட்சம்

மும்பையில் ரூ. 6 கோடி மதிப்புடைய நவீன வீடு

என காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு ரூ. 66 கோடி முதல் ரூ. 83 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

திருமணமான பின்னரும் கோடிக்கணக்கில் சொத்து குவித்து கொண்டே இருக்கும் காஜல் அகர்வால் கணவரை கைக்குள் போட்டுக்கொண்டு தனது கனவையும் , லட்சியத்தையும், வருமானத்தையும் சம்பாதித்து சொத்துக்களை குவித்து வருவதாக சினிமா உலகில் கிசுகிசுக்கிறார்கள்.