முதல் பட இயக்குனர் என்னிடம் அப்படி நடந்துக்கொண்டார் – காஜல் அகர்வால் பளீச்!

முதல் பட இயக்குனர் என்னிடம் அப்படி நடந்துக்கொண்டார் – காஜல் அகர்வால் பளீச்!

சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை காஜல் அகர்வால் இவர் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் விஜய் அஜித் சூர்யா தனுஷ் இப்படி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்த்து நடித்து பிரபல நடிகையாக காஜல் அகர்வால் இடத்தைப் பிடித்தார்.

தற்போது காஜல் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய முதல் படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி காஜல் அகர்வால் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதாவது என்னுடைய முதல் படமே தெலுங்கில் வெளிவந்த “லட்சுமி கல்யாணம்” என்ற திரைப்படத்தில் தான் அந்த படத்தில் நடிக்க என அழைத்தபோது எனக்கு தெலுங்கு தெரியாது.

இயக்குனருடன் நான் எப்படி பேசுவது என்ற ஒரு அச்சத்திலே படப்பிடிப்பில் சென்று உட்கார்ந்தேன். அப்போது அந்த படத்தின் சூட்டில் என்னுடைய அப்பாவும் என்னுடன் வந்திருந்தால் அந்த சமயத்தில் இயக்குனர் என் அருகில் வந்து அழுது காட்டுங்கள் என கூறினார் .உடனே எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை திருதிருன்னு முழித்துக் கொண்டிருந்தேன். என் அப்பா ஒரு வார்த்தை சொன்னார். அந்த வார்த்தை கேட்டதும் எனக்கு அழுகை தார தாரையாய் வந்துவிட்டது. உடனே இயக்குனர் ரொம்ப நல்ல அழுத என்று சொல்லி என்னை பாராட்டியதோடு பட வாய்ப்பையும் கொடுத்தார் என காஜல் அகர்வால் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.