நடிகருடன் மறுமணமா? கொதித்தெழுந்த நடிகை மீனா – காட்டமான பதில்!

நடிகருடன் மறுமணமா? கொதித்தெழுந்த நடிகை மீனா – காட்டமான பதில்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு ,கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்த முன்னணி நடிகையாக பெயர் எடுத்திருப்பவர் தான் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சிவாஜி கணேசன் நெஞ்சங்கள் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அதன் பிறகு 90ஸ் காலகட்டத்தில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மீனா தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்கள் நடித்தது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டார்.

இதனிடையே மீனா மீனா பெங்களூரை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகர் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். நைனிகா தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தெறி பேபி என்று அவர் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.

இதனிடையே கணவர் வித்யாசாகர் கடந்த 2022 ஆம் ஆண்டு நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். அதன் பின்னர் மீனா தனிமையில் வாழ்ந்து வருவதாக பலரும் விமர்சிக்க தொடங்கினார். அவர் மறுபடியும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும்.. நெருங்கிய நண்பர், திரையுலகத்தை சேர்ந்த நட்சத்திர நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகும். அவ்வப்போது வதந்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. இதை கேட்டு மிகவும் மிகுந்த கோபத்திற்கு ஆளான நடிகை மீனா தற்போது இது குறித்த விளக்கம் ஒன்றை தெரிவித்திருக்கிறார்.

அந்த பேட்டியில் சமூக வலைதளங்களில் உண்மையை சொல்லுங்கள் அதுதான் நல்லது. நாட்டில் என்னை போல தனிமையில் வாழும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தற்போதைக்கு எனக்கு இரண்டாவது திருமணம் பற்றிய எந்த சிந்தனையும் இல்லை. எதிர்கால முடிவு பற்றி இப்போதே எப்படி சொல்ல முடியும்? என காட்டுமாக தனது பதிலை பதிவு செய்துள்ளார் நடிகை மீனா.