அழகில் ஆளையே அசரடிக்கும் பொன்னியன் செல்வன் பட நடிகை!….

Spread the love

நடிகை சோபிதா துலிபாலாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்……

தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்துத் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோபிதா துலிபாலா. 2013 ல் ஃபெமினா மிஸ் இந்தியா என்ற பட்டத்தை வென்றார். அதன் பின் 2016 ல் அனுராக் காஷ்யப்பின் “ராமன் ராகவ் 2.0” என்ற அதிரடித் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தெலுங்கில் “குட்டாச்சாரி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் அமேசான் பிரைம் வீடியோவின் சீரியல் தொடரான மேட் இன் ஹெவன் என்ற தொடரில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பொன்னியன் செல்வன் படத்தில் வானதி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மிகப்பெரும் வெற்றியைக் கொடுத்தது.

அதனை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஏங்கவைக்கிறார். தற்போது சுடிதாரில் ஆளையே அசத்தும் அழகில் போட்டோஷுட் எடுத்துள்ளார்.