
நடிகை பூனம் பஜ்வா, கவர்ச்சி உடையில் கடற்கரையில் யோகா செய்யும் வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் இந்த வீடியோ பதிவு ரசிகர்களை ஏங்கவைத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. 2005 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமா மூலம் திறையுரையில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தார். கலக்கல் நாயகியாக வலம் வந்த பூனம், தமிழ் சினிமா பக்கம் திரும்பினார்.
2008 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான ‘சேவல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். இப்படத்தை தொடர்ந்து ஜீவாவுடன் சேர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை பூனம் பஜ்வா கொடுத்துவந்தார்.குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த பூனம், தன்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை காட்டும் வகையில் ‘கச்சேரி ஆரம்பம்’ படத்தில் கவர்ச்சி தூக்கலாக நடித்திருந்தார். கவர்ச்சி காட்டி நடித்தால் பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்த்த பூனம் பஜ்வாவுக்கு தோல்வியே கிடைத்தது.
தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாளம், கன்னடம் மொழி படங்களில் நடித்து வந்தார். பெரிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழில் இயக்குநர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 2 படத்தின் மூலம் கவர்ச்சியாக ரீ- என்ட்ரி கொடுத்தார்.இப்படத்தை தொடர்ந்து மீண்டும் சுந்தர் சி உடன் முத்தின கத்திரிக்காய், ஜிவி பிரகாஷின் குப்பத்து ராஜா ஆகிய படங்களில் வழக்கத்துக்கு மாறாக அதிக கவர்ச்சியில் நடித்து ரசிகர்களை ஏங்கவைத்தார். என்னதான் கவர்ச்சி காட்டி நடித்தாலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது.
சில நேரங்களில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை பாடாய்படுத்துவார். பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி இணையத்தை தன்வசம் வைத்துருக்கிறார் பூனம் பஜ்வா.


