
முட்டைக்கு கண்ணு முழி அழகியாக ரசிகர்களை கவர்ந்த பிரணிதா சுபாஷ் 2010 ல் “பொற்கி” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்“. தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான “சகுனி” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இதனிடையே வாய்ப்பு கிடைக்காததால் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார்.
இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. பிரசவத்திற்கு பின்னர் தனது உடலை உடற்பயிற்சிகள் செய்து கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அவர் தற்போது நவராத்திரி vibes என கூறி அழகாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.