காலத்தின் கோலம் கேப்டன் விஜயகாந்திற்கே ஆப்பு வைத்த நடிகை ராதிகா !

காலத்தின் கோலம் கேப்டன் விஜயகாந்திற்கே ஆப்பு வைத்த நடிகை ராதிகா !

என்ன சொல்வது ? இது தான் காலத்தின் கோலம் என்பார்களோ தெரியவில்லை. கேப்டன் விஜயகாந் மறைவுக்கு கண்ணீர் சிந்தி பேட்டி கொடுத்தார் நடிகை ராதிகா. தன்னை வளர்த்து விட்ட நடிகர்களில் விஜயகாந்தும் ஒருவர் என்றார். ஆனால் தற்போது நடக்கும் தேர்தலில், விருது நகரில், விஜயகாந்தின் மகனுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார் நடிகை ராதிகா. அட விஜயகாந்தின் மகன் இந்த தொகுதியில் நிற்கிறாரே என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு.

அவர் சின்னப் பையன் அவர் ஆசை அவர் நிற்கிறார். என்று நாசுக்காக ஒரு பதிலைச் சொல்லி நழுவிவிட்டார் ராதிகா. சமீபத்தில் தான் விஜயகாந்த இறந்தார். அந்த அனுதாப அலை இன்னும் ஓயவில்லை. இந்த நிலையில் அவர் வாரிசு நிற்க்கும் இடத்தில் ராதிகா ஏன் போட்டியிடவேண்டும் ? என்று நெட்டிசன்கள் கிழி கிழி என்று கிழிக்கிறார்கள். ஆனால் ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது ?

இது இவ்வாறு இருக்க ராதிகாவின் கணவரும் நடிகருமான சரத்குமார் தனது கட்சியை ப.ஜ.கவுடன் இணைத்துள்ளார். இதில் அங்கம் வகித்த பல மூத்த உறுப்பினர்கள் பெரும் அதிருப்த்தியில் உள்ளார்கள். அவர்களில் பலர் வேறு கட்சிகளோடு சென்று இணைந்துவிட்டார்கள். அவரும் தன் அடையாளத்தை தொலைத்து நிற்கிறார்.