எப்போ கல்யாணம்? வேற கேள்வியே இல்லையா? முகம் சுளித்த ஸ்ருதிஹாசன்!

எப்போ கல்யாணம்? வேற கேள்வியே இல்லையா? முகம் சுளித்த ஸ்ருதிஹாசன்!

கமல் ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ருதி ஹாசன் இவர் குழந்தை பருவத்தில் பாடுவதில் அதிக திறமை கொண்டிருந்தார்.

அதன் பின்னர் ஹீரோயினாக அறிமுகமானார் ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அஜித், விஷால், சூர்யா , தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்ததால் பிரபல நடிகையாக வலம் வந்தார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இனிமேல் என்ற இசை ஆல்பத்தில் நடித்திருந்தார். இந்த ஆல்பத்தில் இருவரது ரொமான்ஸ் மிகப்பெரிய அளவில் பேசும்படியாக இருந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட ஸ்ருதிஹாசனிடம் நிரூபரின் கேள்வி ஒன்று முகம் சுளிக்க வைக்கும் படியாக இருந்துள்ளது.

நிரூபர் கேட்ட கேள்வி, பாடலின் ஆரம்பமும் முடிவும் ரொம்ப நல்லா இருக்கு, எப்போ உங்களுக்கு கல்யாணம்? என்று கேட்டார். உடனே ஸ்ருதிஹாசனின் முகம் சட்டென்று மாறி, சார் சீரியசாவா கேட்குறீங்க ? தெரியல சார், சத்தியமா தெரியல சார். இந்த பாடல் பற்றி ஏதாவது கேள்வி கேளுங்க என்று முகம் சுளித்தபடி கூறினார்.