சுத்தி போடுங்க டோலி…. சினேகாவின் குடும்ப புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!

சுத்தி போடுங்க டோலி…. சினேகாவின் குடும்ப புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை சினேகா 2000 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தார். என்னவளே திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

இவர் தொடர்ந்து பார்த்தாலே பரவசம், கிங் ,பம்மல் கே சம்பந்த, ஜனா ,ஆட்டோகிராப், புதுப்பேட்டை, பிரிவோம் சந்திப்போம்,சிலம்பாட்டம் ,கோவா உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் இவர் நடித்த முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருந்தார் .

இதனிடையே பிரபல நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சினேகாவுக்கு ஒரு மகன் ஒரு மகள் என அழகான குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். குழந்தை பிறப்புக்கு பிறகு சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி தொடர்ச்சியாக ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் சினேகாவின் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகிய தீயாய் பரவி வருகிறது.