விஜய் – திரிஷா ரகசிய காதல் உண்மையா? மீண்டும் இணையும் ஜோடி!

விஜய் – திரிஷா ரகசிய காதல் உண்மையா? மீண்டும் இணையும் ஜோடி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தடுத்து படு பிசியாக நடந்து வருகிறது. இதனிடையே விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். கட்சி வேலைகளிலும் படு பிஸியாக இருந்து வரும் விஜய் அதற்காக தனது ரசிகர்களை அரசியல் வேளைகளில் நியமித்து அவர்கள் மூலம் மக்களுக்கு தேவையான நல உதவிகளை செய்து மக்களின் நற்பெயரை சம்பாதித்து வருகிறார்.

தொடர்ந்து அடுத்தடுத்து அரசியலில் மும்முரமாக இறங்கி உள்ள விஜய் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்ததும் கடைசியாக ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்துவிட்டு அத்தோடு சினிமாவிற்கு டாட்டா காட்ட முடிவெடுத்துள்ளாராம். அந்த படத்தை யார் இயக்க போகிறார் என்பது இன்றுவரை கேள்விக்குறியாக உள்ளது. இதனிடையே விஜய் நடிகை திரிஷாவுடன் காதல் கிசு கிசுக்கப்பட்டார். அவருடன் லியோ படத்தில் நடித்த போது இருவரும் நெருக்கமான லிப்லாக் காட்சியில் நடித்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

அதுமட்டுமில்லாமல் நடிகை திரிஷாவுக்கு கோடி கணக்கில் வைர நெக்லஸ் ஒன்றை வாங்கி கொடுத்ததாகவும் கிசு கிசு செய்திகள் வெளியானது. இதனிடையே நடிகை திரிஷாவுடன் நடிக வேண்டாம் ஏற்கனவே விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்யை எச்சரித்ததாகவும் அதையும் மீறி அவர் பல ஆண்டுகளுக்குப் பின் திரிஷாவுடன் முத்தக் காட்சியில் நடித்தார்.

இதனால் மனைவி சங்கீதாவுக்கும் விஜய்க்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு சண்டை பிரிவு விவாகரத்து என்றெல்லாம் செய்திகள் அடுத்தடுத்து கசிந்து வந்தது. இதனிடையே இவர்கள் இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் மனைவி சங்கீதா மகன் மற்றும் மகளுடன் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் விஜய் தற்போது அரசியலில் இறங்கி இங்கு பிஸியாக இருந்து வருவதால் குடும்பத்தை கண்டு கொள்வதில்லை என்றும் செய்திகள் வெளியானது.

இப்படியான நேரத்தில் நடிகர் விஜய் தற்போது மீண்டும் திரிஷாவுடன் இணைந்து நடிக்க உள்ளாராம். ஆம் இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்கள் முழுக்க தீயாய் பரவி விடுகிறது. ஆம், கோட் படத்தில் நடிகை திரிஷா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். இதை அறிந்த நெட்டிசன்ஸ் அப்போ வெளியான அத்தனை கிசுகிசு செய்திகளும் உண்மை தானா? என பலரும் அவரை விமர்சித்துள்ளனர்.