வில்லனாக நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு மீண்டும் முன்னணி நடிகருக்கு வில்லனாக நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி.

தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என எதுவாக இருந்தாலும் நடிப்பில் நிறத்தை ரசிகர்களை கவர்ந்து வருபவர் விஜய் சேதுபதி. ‌

இவர் வில்லனாக நடிக்கும் படங்களில் ஹீரோவை காட்டிலும் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்ட காரணத்தினால் ஹீரோவின் இமேஜ் டேமேஜ் ஆகாத அளவிற்கு நடிக்க வேண்டும் என இயக்குனர்கள் கூறுவதாகவும் அதனால் இனி வில்லனாக நடிக்க போவதில்லை எனவும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் விஜய் சேதுபதி இதற்கு ஓகே சொல்வாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.