படுதோல்வியடைந்த “வாரிசு”…. பட வாய்ப்பு இல்லாமல் திண்டாடும் இயக்குனர் வம்சி!

படுதோல்வியடைந்த “வாரிசு”…. பட வாய்ப்பு இல்லாமல் திண்டாடும் இயக்குனர் வம்சி!

தெலுங்கு திரையுலகில் பிரபலமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தவர் இயக்குனர் வம்சி இவர் டோலிவுட்டில் பல்வேறு சூப்பர் ஹீரோக்களை வைத்து படம் இயக்கி பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதனால் இவர் தமிழுக்கு வந்து தமிழ் ஹீரோக்களை படம் இயக்கினால் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என தயாரிப்பாளர்கள் குருட்டுத்தனமாக அவரை முழுமையாக நம்பி கோலிவுட்டின் நட்சத்திர நடிகரான விஜய்யை வைத்து வாரிசு படத்தை எடுத்தார்கள்.

ஆனால், அவரோ வந்த வேகத்தில் முதல் படத்திலே ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின் வெறுப்பிற்கும் ஆகிவிட்டார். ஆம், படம் அட்டர் பிளாப் ஆகிவிட்டது. தனது ஒட்டுமொத்த கெரியரையும் காலி செய்துவிட்டு டோலிவுட்டிற்கே ஓடிவிட்டார். முழுக்க முழுக்க சீரியல் ஒன்று குடும்ப கதைகளத்தில் உருவான வாரிசு படத்தை நெட்டிசன்ஸ் மோசமாக விமர்சித்துத்தள்ளினர்.

இப்படத்தில் சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ் , ராஷ்மிகா என பலரும் நடித்திருந்தார்கள். இந்த படம் குடும்ப கதையை மையமாக வைத்து வெளிவந்திருந்ததால் கிட்டத்தட்ட சீரியல் ரேஞ்சுக்கு இருந்தது இந்த படத்தில் பெரிதாக சொல்லும் படியும் படி சுவாரசியமோ மிகப் பெரிய திருப்பாங்களோ இல்லை. படத்தை எடுக்க சொன்னால் சீரியல் எடுத்து வச்சிருக்கீங்க என பலரும் வம்சியை விமர்சித்து தள்ளினார்கள்.

அப்பா மகனுக்கு சண்டை… அம்மா ரொம்ப செண்டிமெண்ட்…. சொத்தை அபகரித்துக் கொள்ள பார்க்கும் அண்ணன் இப்படி கிட்டத்தட்ட குடும்ப சீரியல் கதையாகவே வாரிசு படத்தை எடுத்து வைத்திருந்தார். இது நம் தமிழ் மக்களிடம் எடுப்படவே இல்லை. இதை பங்கமாக ஓட்டி கலாய்த்து தள்ளிவிட்டார்கள் இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படுமோசமாக தோல்வியடைந்துவிட்டது.

இதனால் தயாரிப்பாளர் பெரும் நஷ்டம் அடைந்துவிட்டார். எனவே படத்தின் இயக்குனர் வம்சிக்கு யாரும் வாய்ப்பு கொடுக்க முன்வரவில்லை. இதனால் அவரது மார்க்கெட்டை மிகவும் பாதாளத்தில் சரிந்து போய்விட்டது. எல்லாத்துக்கும் வாரிசு பட தோல்விதான் காரணம் என தலையில் துண்டை போட்டு பரிதாபமாக மூலையில் முடங்கிவிட்டார் வம்சி என திரை வட்டாரங்கள் கூறுகிறது.