சித்தார்த்துக்கு வலையை விரிக்கும் ஐஸ்வர்யா ரஜனி காந்த்.. சிக்குமா ? சிங்கம் ?

சித்தார்த்துக்கு வலையை விரிக்கும் ஐஸ்வர்யா ரஜனி காந்த்..  சிக்குமா ? சிங்கம் ?

 

சமீபத்தில் லால் சலாம் படத்தை தயாரித்து, பல விமர்சனங்களைப் பெற்ற ஐஸ்வர்யா ரஜனிகாந் தற்போது மற்றும் ஒரு படத்தை இயக்க உள்ளாராம். எப்படி என்றாலும் ஒரு முன்னணி இயக்குனர் ஆகவேண்டும் என்பதே தனது ஆசை என்று அவர் கூறி வருகிறார். 40 கோடி செலவில் எடுக்கப்பட்ட லால் சலாம், படம் நஷ்டத்தில் முடிந்தது. இதில் ரஜனி கேமியோ றோலில் நடிக்கவில்லை என்றால், படம் படுதோல்வி அடைந்திருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில்…

ஐஸ்வர்யா தேடலில் சிக்கியவர் தான் சித்தார்த். சமீபகாலமாக அவர் நடிக்கும் படங்கள் ஓகோ ஆஹா என்று ஓடி வருகிறது. இதனால் அவரை வைத்து ஒரு படம் பண்ணலாமே என்று ஐஸ் நினைத்துள்ளார். சித்தார்த்தை அணுகி தனது படத்தில் நடிக்குமாறு கேட்டுள்ளார். ஐயோ ஆளை விட்டால் போதும் சாமி என்று மனதுக்குள் நினைத்த சித்தார்த் . இதனை எப்படி வெளியே சொல்வது என்று தெரியாமல். முழுக் கதையோடு வாருங்கள். அதன் பின்னர் முடிவை எடுக்கலாமே என்று நாசூக்காகச் சொல்லி தப்பிவிட்டாராம் !

இதனை அடுத்து சித்தார்த்தின் பதிலை சூசகமாக அறிந்துகொண்ட ஐஸ்வர்யா, வேறு ஒரு ஹீரோவை தேட ஆரம்பித்துள்ளாராம். ஆனால் இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால். இன்னும் ஐஸ்வர்யாவுக்கு பணம் கொடுத்து, அவரை இயக்குனராக வைத்து படம் எடுக்க, சில தயாரிப்பாளர்கள், தயாராகத்தான்  இருக்கிறார்கள் என்பது தான்.