பைக் ரைடில் பிரியாணி செய்து அசத்திய அஜித்… தீயாய் பரவும் வீடியோ!

பைக் ரைடில் பிரியாணி செய்து அசத்திய அஜித்… தீயாய் பரவும் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வரும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் படத்தின் போஸ்டர் கூட அண்மையில் வழியாக ரசிகர்கள் எல்லோரையும் வெகுவாகக் கவர்ந்தது

இதனிடையே அஜித்துக்கு மூளையில் காதுக்கும் செல்லுக்கும் நரம்பில் கட்டி இருப்பதாகக் கண்டறியப்பட்டு அண்மையில் அறுவை சிகிச்சை செய்தனர். அந்த செய்தி மிகவும் வைரல் ஆகி பரபரப்பாக பேசப்பட்டது. அஜித்திற்கு என்ன ஆனது என அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.

ஆனால், அஜித் அறுவைச்சிகிச்சை முடிந்த கையேடு தன்னுடைய மகனின் பள்ளியில் ஃபுட்பால் விளையாடும் போட்டியில் கலந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. இதனால் அஜித் நலமுடன் தான் இருக்கிறார் என்பதை நிரூபித்தனர்.

மீண்டும் உடல்நிலை சரியானதும் பைக் ரைடு சென்றுள்ளார் அஜித். தனது நண்பர்கள் மற்றும் விடாமுயற்சி பட குழுவினர்களுடன் அவர் சென்றிருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியது அது மட்டும் இல்லாமல் தன்னுடன் பைக் ரெய்டு சென்ற நண்பர்களுக்கு தன் கையாலே பிரியாணி சமைத்து கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

வீடியோ லிங்க்: