என்கிட்ட ஏன் சொல்லல…? பிரபல இயக்குனரிடம் சண்டைக்கு சென்ற அஜித்!

என்கிட்ட ஏன் சொல்லல…? பிரபல இயக்குனரிடம் சண்டைக்கு சென்ற அஜித்!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான நடிகர் அஜித் அல்டிமேட் ஸ்டார் என அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இவர் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இடத்தை பிடித்து விட்டார்.

தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார். இதனிடையே சினிமாவை தாண்டிப் பைக் ரேஸ் , கார் ரேஸ் உள்ளிட்டவற்றில் அதிக ஈடுபாடுகொண்டிருக்கிறார்.

ஷூட்டிங் முடித்துவிட்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் பைக் டூர் சென்றிடுவார். தற்போது அஜித் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் ராமச்சந்திரன் இயக்கத்தில் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது யாருக்கும் தெரியாத ஒரு தகவல் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதாவது அஜித் தன்னுடைய ஃபேவரைட் இயக்குநரான சரணிடம் கோபப்பட்உள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு ஆர்யாவை வைத்துச் சரண் இயக்கிய படம் வட்டாரம். அந்தப் படம் அப்போது கொண்டாடப்படவில்லை.

இப்போது கொண்டாடப்படுகிறது.அந்தப் படத்தை அஜித்திடம் ஃப்ரிவ்யூ ஷோ போட்டுக் காண்பித்தாராம் சரண் . அதனைப் பார்த்த அஜித், இந்தக் கதையை என்னிடம் சொல்லியிருந்தால் நான் நடித்திருப்பேன். ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கோபத்துடன் கேட்டாராம். இதனை சரணே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.