பல கோடி கொட்டிக்கொடுத்து வெளிநாட்டில் புது வீடு வாங்கிய அஜித் – எங்கு தெரியுமா?

பல கோடி கொட்டிக்கொடுத்து வெளிநாட்டில் புது வீடு வாங்கிய அஜித் – எங்கு தெரியுமா?

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான அஜித் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தில் கமிட்டாகி படு பிசியாக ஷூட்டிங்கில் தொடர்ந்து வருகிறார். இதனிடையே அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் போஸ்டர் நேற்று தான் வெளியாகியிருந்தது. அதன் போஸ்டரிலே படத்தின் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அஜித் தொடர்ந்து பிஸியாக நடித்த வரும் நிலையில் ஒரு பக்கம் பைக் டூர், கார் ரேஸ் என தனது இஷ்டமான வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அந்த வகையில் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று மாத கணக்கில் தனது மகிழ்ச்சியான நேரங்களை செலவிட்டு வருகிறார். அதன் புகைப்படங்களும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.இந்நிலை தற்போது அஜித் குறித்த ஒரு சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அஜித் வெளிநாட்டில் வீடு ஒன்றை வாங்கி இருக்கிறாராம். அது பல கோடி கொடுத்து வாங்கப்பட்ட வீடு என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே துபாயில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி அங்கு செல்லும்போதெல்லாம் அந்த வீட்டில் தங்கி வரும் அஜித் தற்போது மீண்டும் துபாயில் பல கோடி கொடுத்து புதிய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்.

இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது. இருந்தாலும் விரைவில் அஜித்தின் புதிய வீட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகலாம் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.