“குட் பேட் அக்லி”…. AK 63 படத்தின் தரமான First Look இதோ!

“குட் பேட் அக்லி”…. AK 63 படத்தின் தரமான First Look இதோ!

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் ஆன நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் மும்முறமாக நடித்துக் கொண்டிருந்தார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடைபெற்று வந்த நிலையில் நிதி நெருக்கடி காரணமாக படத்தின் சூட்டிங் அவ்வப்போது தள்ளிக்கொண்டே சென்றது.

இதனால் சில பல பிரச்சனைகள் ஏற்பட்டது. தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றனர். இதனிடையே அஜித் தனது அடுத்த படத்தில் சைன் பண்ணி விட்டார். அதாவது ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். ஆதிக்க ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை பற்றி ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இந்த படத்தை தெலுங்கு சினிமாவில் பாப்புலரான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் தான் தயாரிக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். ஏகே 63 தடத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்ததால் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஆவலோடு காத்திருந்தனர்.

அவர்களின் காத்திருப்பையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்தது போலவே தரமான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது இப்ப படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. படத்திற்கு குட் பேட் அக்லி என பெயரிட்டுள்ளனர். மேலும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வருகிற 2025-ல் இப்படத்தை ரிலீஸ் செய்யப்பட குழு அறிவித்துள்ளனர்.

இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இணையத்தில் இந்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வைரல் ஆகி வருகிறது. இதில் பல முட்கம்பிகள் கொண்டு கட்டப்பட்டது போலும் அதில் ரத்தம் தெளிப்பது போல் வெறித்தனமாக வெளியாகி உள்ளது. குட் பேட் அண்ட் அக்லி போஸ்டர் வித்தியாசமாகவும் டைட்டில் கொஞ்சம் கூடுதலான கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனவே இப்படத்தில் அஜித்தின் நடிப்பும் மிரட்டல் ஆகும் ஆக்ஷன் காட்சிகள் அதிரடியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.