
நடிகை அனிகாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்………
பேபி அனிகா என்று அழைக்கப்படும் அனிகா சுரேந்திரன் மலையாளம், தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்துள்ளார். 2010 ல் “காதா துடாருன்னு” என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து மலையாளத்தில் 7 படங்கள் நடித்துள்ளார்.
பின் “என்னை அறிந்தால்” திரைப்படத்தின் மூலம் அஜித்தின் மகளாகத் தமிழில் அறிமுகமானார். பின் 2015 ல் “நானும் ரவுடிதான்” திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இணைந்து “விஷவாசம்” என்ற படத்தில் நடித்துள்ளார். துணை வேடங்களில் நடித்த அனிகா தற்போது ஹீரோயின் ஆகிவிட்டார்.
2023 ல் “ஓ மை டார்லிங்” என்ற மலையாளத் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதில் வரும் ‘லிப்லாக்’ சீனில் அனிகா தாராளமாக லிப்லாக் அடித்து அசத்தினார். தற்போது “அன்புடன் உங்கள் தேவா” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரை குட்டி நயன்தாரா என்று ரசிகர்கள் அழைக்கின்றனர்.
தற்போது குட்டி நயன்தாரா சோசியல் மீடியாக்களில் அசத்தலான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாகக் கவருகின்றார்.





