மகனின் பிரம்மாண்ட பிறந்தநாள்… ஆல்யா மானசாவுக்கு குவியும் லைக்ஸ்!

மகனின் பிரம்மாண்ட பிறந்தநாள்… ஆல்யா மானசாவுக்கு குவியும் லைக்ஸ்!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆலியா மானசா. இவர் ராஜா ராணி சீரியலில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இந்த சீரியல் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் கொடுத்தது.

அந்த தொடரில் கிடைத்த பிரபலத்தை வைத்து விளம்பரங்களில் நடித்து பெரும் புகழ்பெற்றார். இதன் மூலம் நல்ல வருமானத்தையும் சம்பாதித்து வருகிறார். இதனிடையே ராஜா ராணி தொடரில் தனக்கு கதாநாயகனாக நடித்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளது. தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் ஆலியா மானசா தற்போது சன் தொலைக்காட்சி நடித்து வரும் இனியா தொடர் அவருக்கு பெரும் பிரபலத்தையும் கொடுத்திருக்கிறது.

அடுத்தடுத்து சீரியல்களில் நடித்துக் கொண்டே பல்வேறு விளம்பரப்படங்களிலும் நடித்துக் வரும் ஆல்யா மானசா தற்போது தனது மகனின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய புகைப்படங்கள் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வருகிறது.