திருமண தேதியை அறிவித்த அமீர் – பாவனி ஜோடி… குதூகலிக்கும் ரசிகர்கள்!

திருமண தேதியை அறிவித்த அமீர் – பாவனி ஜோடி… குதூகலிக்கும் ரசிகர்கள்!

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்தவரும் நடிகை பாவினி முதன் முதலில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சீரியல்களின் மூலம் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்று சொல்லலாம். குறிப்பாக தெலுங்கு சீரியல் நடித்து அங்கு மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. தமிழ் திரைப்படமான துணிவு படத்தில் அஜித்குமாருக்கு எதிராக துணைவேட்டில் நடித்திருந்தார். பிக் பாஸ் தமிழ் 5 சீசனில் கலந்து கொண்டார். போட்டியாளராக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனார். இவரது அழகும் இவரது தோற்றமும் இவரது பவ்யமான குணமும் எல்லோருக்கும் பிடித்து விட்டது.

குறிப்பாக அதை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அமீர் அவர்களை காதலித்து வந்தார். இவர்கள் நிகழ்ச்சியில் உள்ளே இருக்கும்போதே காதலிக்க துவங்கினர். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகும் தங்களது காதலை தொடர ஆரம்பித்தனர். இது உண்மையான காதல் என மக்கள் அதுக்கப்புறம் பேச ஆரம்பித்தனர். ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது பேட்டிகளிலும் பேட்டிகளிலும் தங்கள் பங்கேற்று இருவரும் ஜோடியாக பங்கேற்று வருகின்றனர்.

பல வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி தற்போது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர். எப்போதும் திருமணம்? என பலரும் அவர்களிடம் கேட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான விடையும் கொடுத்துள்ளார்கள். ஆம் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜோடியாக கலந்துக்கொண்டபோது போது தங்களது திருமண தேதியை கூறினார்கள்.

அதாவது இந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடக்கும் என அமீர் – பாவினி ஜோடி அறிவித்துள்ளனர். இவர்களின் திருமண செய்தியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிற ரசிகர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.