அழகான லெகோஷனில் காதலரை நிச்சயதார்த்தம் செய்துகொண்ட எமி ஜாக்சன்!

அழகான லெகோஷனில் காதலரை நிச்சயதார்த்தம் செய்துகொண்ட எமி ஜாக்சன்!

மதராசப் பட்டணம் படம் மூலம் தமிழில் அறிமுகமான எமி ஜாக்சன் தொடர்ந்து தங்க மகன், ஐ, எந்திரன் 2 ஆகிய படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்தார். அதன் பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஆண்ட்ரியாஸ் என்ற மகன் உள்ளார். மகன் பிறந்த பின்னர் எமி, தன்னுடைய காதலரை பிரிந்தார். அவரின் மகன் எமி ஜாக்சனோடு வளர்ந்து வந்தார்.

இந்நிலையில் இப்போது எமி ஜாக்சன் மீண்டும் நடிப்பில் ஆர்வமாக இறங்க உள்ளார். அந்த வகையில் ஏ எல் விஜய் இயக்கத்தில் மிஷன் படத்தில் நடிக்க அந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது எமிஜாக்சன் மீண்டும் காதலில் விழுந்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகரான எட் வெஸ்ட்விக்கை காதலித்து வந்த அவர் இப்போது அவரை நிச்சயம் செய்துகொண்டுள்ளார். வெஸ்ட்விக் அணிவித்த நிச்சயதார்த்த மோதிரத்தை சுவிட்சர்லாந்தின் பீக்வாக் தொங்குபாலத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார் எமி ஜாக்சன்.

athirvu