ஸ்ருதி ஹாசனுடன் கிளுகிளுப்பு…. லோகேஷை பார்த்து இப்படி சொல்லிட்டாங்களே ஆண்ட்ரியா?

ஸ்ருதி ஹாசனுடன் கிளுகிளுப்பு…. லோகேஷை பார்த்து இப்படி சொல்லிட்டாங்களே ஆண்ட்ரியா?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த மாநகரம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி இருந்தார்.

அந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து லோகேஷின் புகழ் ஊரெங்கும் ஓங்கி ஒலித்தது. தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வசூல் ரீதியாக சாதனை படைத்தார். அடுத்ததாக உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து விக்ரம் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை இயக்கி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த மெகா வெற்றிக்கு பின்னர் மீண்டும் நடிகர் விஜய் கூட்டணியில் இணைந்து லியோ படம் வெளியானது. அந்த படமும் லோகேஷின் கெரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்றது. இந்த நேரத்தில் லோகேஷ் கமல் ஹாசன் தயாரிப்பில் “இனிமேல்”என்ற மியூசிக் ஆல்பத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் ஸ்ருதி ஹாசனுடன் அவர் தாறுமாறாக ரொமான்ஸ் செய்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் நடிகை ஆண்ட்ரியாவிடம் கேட்டதற்கு, “அவர் கதை எழுதும் போது இந்த ரொமான்ஸ்லாம் வரலையா.. அப்படின்னு நான் சொல்லல அந்த பாடல் டீசரின் கமெண்ட் பக்கத்தில் பார்த்தேன்” என நைசாக எஸ்கேப் ஆகி விட்டார். நடிகை ஆண்ட்ரியா மாஸ்டர் படத்தில் விஜய்க்கு தோழியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.