காசுக்காக கீழ்த்தரமான செயலை செய்த அனிதா சம்பத் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

காசுக்காக கீழ்த்தரமான செயலை செய்த அனிதா சம்பத் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

செய்தி வாசிப்பாளராக தமிழில் சினிமாவில் அறிமுகமாகி அதன் மூலம் பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் பெற்றவர் அனிதா சம்பத். இவருக்கு அதன் மூலம் பிக் பாஸ் வாய்ப்புகளும் கிடைத்தது. குறிப்பாக தமிழில் பல்வேறு திரைப்படங்களில் கிடைத்த ரோல்களில் நடித்து தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய சோக கதைகளை அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டிருந்த அவரை பலர் கலாய்த்து கொண்டிருந்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு அவருடைய வாழ்க்கையில் பெரிய இழப்பு ஏற்பட்டுவிட்டது

ஆம், அவர் தந்தை இறந்துவிட்டார். இந்த நிலையில் தனது தந்தையின் இறப்புக்கு பிறகு அதிலிருந்து மீண்டும் வந்து மறுபடியும் திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இதனிடையே YouTube சேனலை சொந்தமாக நடத்தியும் அதன் மூலம் கணிசமான வருமானம் சம்பாதித்து வருகிறார்.

இவர் தனுடன் வேலை பார்த்து வந்த பிரபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பல ஆண்டுகள் காதலித்து பின்னர் நட்சத்திர ஜோடிகளாக தற்போது வாழ்ந்து வருகிறார்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள் பல அனுபவத்திருந்தாலும் தற்போது படிப்படியாக தங்களது உழைப்பின் மூலம் முன்னேறி வருகிறார்கள். அண்மையில் கூட இவர்கள் தங்களது கனவு வீட்டை கட்டி அதில் குடியேறினார்கள்.
அதை பற்றி நீயா நானா நிகழ்ச்சியில் கூட அனிதா சம்பத் மிகவும் எமோஷனலாக பேசியிருந்தார்.

குறிப்பாக பூமியில் இருந்து வானம் என்னுடைய இடம் என்று அவர் சொல்லிய அந்த எமோஷனல் டயலாக் மிகப்பெரிய அளவில் பேமாஸ் ஆகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் தற்போது கணவருடன் சேர்ந்து வெளிநாட்டிற்கு பயணம் செய்துள்ளார். அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கி உள்ளது.

ஆம், அனிதா சம்பத் தற்போது அவரது கணவர் உடன் மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அவர் சொந்தமாக youtube சேனல் நடத்திவரும் நிலையில் அதில் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.இது பெரும் சச்சையாகிவிட்டது. ஆம், மாலத்தீவு அரசு தற்போது இந்தியாவுடன் மோதலில் இருந்து வருவதால் அங்கிருக்கும் இந்திய ராணுவ வீரர்களை வெளியேற உதவிட்டு வருகிறது.

அதனால் மாலத்தீவுக்கு இந்தியர்கள் சுற்றுலா வருவதை வந்து செல்வதை தவிர்த்து வருகின்றன இப்படியான நேரத்தில் அனிதா சம்பத் அங்கு சுற்றுலா சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருவது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. உங்களுக்கு இந்தியாவில் வேறு இடமே இல்லையா? மாலத்தீவுக்கு தான் செல்ல வேண்டுமா என்றெல்லாம் பலர் அவரை விமர்சித்து வருகிறார்கள். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக அனிதா சம்பத்திற்கு எதிரான கருத்துகள் பல தற்போது குவிந்து வருகிறது.