விவாகரத்து ஆனவருடன் காதல்…. நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம்!

விவாகரத்து ஆனவருடன் காதல்…. நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம்!

ஆந்திராவை சேர்ந்த பிரபல நடிகையான அஞ்சலி தமிழ், தெலுங்கு ,மலையாளம் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் இவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு பல சூப்பர் ஹிட் படங்களில் கொடுத்திருக்கிறார்.

முதன் முதலில் கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமாகி அதன் பின்னர் ஆயுதம் செய்வோம். அங்காடித் தெரு , எங்கேயும் எப்போதும் , மங்காத்தா , ரெட்டை சுழி, தூங்காநகரம், மகாராஜா கருங்காலி , கலகலப்பு, சேட்டை , வத்திக்குச்சி, இறைவி இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடித்த போது நடிகர் ஜெய்வுடன் காதல் வயப்பட்டு ரகசியமாக இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். மீண்டும் இருவரும் சேர்ந்து மீண்டும் பலூன் திரைப்படத்தில் நடித்த போது இவர்களின் விஷயம் ஊருக்கே அம்பலமானது.

ஆனால் அதைப் பற்றி பொது வெளியில் இருவரும் வெளிப்படையாக பேசவில்லை என்றாலும் அரசல் புரசலாக பல்வேறு கிசுகிசு செய்திகள் வெளியானது. இதனுடையே நடிகர் ஜெய்யின் நடத்தை பிடிக்காமல் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவரை விட்டு ஒதுங்கி வெளியேறி விட்டார்.

அஞ்சலி தற்போது திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்த வருகிறார். இந்நிலையில் அஞ்சலி குறித்த ஒரு அதிர்ச்சியான தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது, தெலுங்கு திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்யவிருப்பதாகவும், அந்தத் தயாரிப்பாளர் ஏற்கெனவே விவாகரத்து ஆனவர் என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் ஒரு திரைப்பட விழாவில் சந்தித்தபோது ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மாறியிருக்கிறது என்றும் தெலுங்கு திரைத்துறை வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அறிந்த ரசிகர்கள்.. இப்போ எல்லாம் செகண்ட் ஹேண்ட்ஸை திருமணம் செய்வது ஒரு ஃபேஷியன் ஆகிவிட்டது என கூறி வருகின்றனர்.