
எண்ணெய் வளமிக்க நாடான லிபியாவில் காணப்படும் அரசியல் ஸ்திரதன்மை மற்றும் தொடர்ச்சியான கிளர்ச்சியாளர்களின் வன்முறைகள் என்பவற்றிலிருந்து தங்களைப் பாதுகாக்க அதிகளவிலான மக்கள் சட்டவிரோதமான முறையில் கடல்வழி மூலமாக ஜரோப்பிய நாடுகளுக்குச் சென்று கொண்டு இருக்கின்றார்கள். ஆபத்து நிறைந்த இந்தக் கடல் பகுதியில் தொடர்ச்சியாக உயிர்ச் சேதங்கங்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் லிபியாவிலிருந்து ஜரோப்பி நாடுகளுக்கு 80 பயணிகளை ஏற்றிக் கொண்டு சட்டவிரோதமா சென்ற படகு ஒன்று விபத்துக்கு உள்ளானதில் படகில் இருந்த 73 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜ.நா.வுக்கான புலம்பெயர்வோர் அமைப்பு தெரிவிக்கையில் குறித்த படகில் இருந்த 07 பேர் நீந்திக் கரைசேர்ந்துள்ள நிலையில் ஏணையவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்களை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.