பேயாக தமன்னா… கொலைநடுங்க வைக்கும் அரண்மனை 4 ட்ரைலர்!

அரண்மனை - தமன்னா

தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு ஒரு தனி வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த வரவேற்பு சந்திரமுகி படத்தில் இருந்து ஆரம்பித்தது. அதன் பிறகு அருந்ததி, காஞ்சனா , அரண்மனை உள்ளிட்ட தொடர்ச்சியாக பேய் படங்களை மக்கள் விரும்பி பார்த்து ரசித்து வருகிறார்கள். குறிப்பாக சிறுவர்கள் பேய் படங்களை கண்டு மிகவும் விரும்பி பார்ப்பவர்களாக இருந்து வருகிறார்கள்.

 

சுந்தர் சி தொடர்ச்சியாக அரண்மனை படத்தை எடுத்து அரண்மனை 1 அரண்மனை 2 அரண்மனை 3 அரண்மனை 4 என அரண்மனையை விடாமல் இயக்கி வருகிறார். தற்போது அரண்மனை 4 படத்தை இயக்கியுள்ள அவர் அதில் அவரே ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் ஹாரர் திரில்லர் காமெடி ஜானரிலில் வெளியாக உள்ளது.

 

இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள் இந்நிலையில் இன்று சற்று முன் படத்தின் டிரைலரை பட குழு வெளியிட்டுள்ளது இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

 

அதாவது கோடை விடுமுறை நாட்கள் குறியாக வைத்து குழந்தைகளை கவர வேண்டும் என இந்த படம் தற்போது ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரைலரில் தமன்னா பேயாக நடித்து அனைவரையும் அதிர வைக்கிறார். ஏதோ ஏதோ ஒரு காரணத்துக்காக தமன்னா தற்கொலைசெய்து இறந்துவிடுகிறார். பின்னர் தாக்கு தீங்கு செய்தவர்களை தேடி பிடித்து விரட்டி விரட்டி பேயாக பழிதீர்த்துக்கொள்கிறார். இதோ அந்த ட்ரைலர்:

 

 

வெங்காய விலை ஏறிப்போச்சு 11 கோடி சம்பளம் கேட்ட நயன் தாரா ஆடிப்போன தயாரிப்பாளர் !