மலையாள சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் அர்ஜூன் தாஸ்

மலையாள சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் அர்ஜூன் தாஸ்

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் அர்ஜூன் தாஸ். இவர், பெருமான், ஆக்சிஜன், கத்தி,அந்தகாரம், மாஸ்டர், புத்தம் புது காதல் விளையாட்டு, விக்ரம், புட்ட பொம்மா, அநீதி, ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இவர் மலையாள சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

கேரளா க்ரைம் பைல்ஸ் வெப் சீரிஸை இயக்கிய அகமது கபீரின் புதிய படத்தின் மூலம் மலையாள சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் அர்ஜூன் தாஸ்.

ஹிருதயம், குஷி, ஹாய் நானா ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார். காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் விரைவில் தொடங்கவுள்ளது.