எல்லோரையும் கிறீஸ்த்தவர் ஆக்கவே விஜய் கட்சியை தொடங்கியுள்ளார்- அர்ஜூன் சம்பத் !

எல்லோரையும் கிறீஸ்த்தவர் ஆக்கவே விஜய் கட்சியை தொடங்கியுள்ளார்- அர்ஜூன் சம்பத் !

நாடு முழுவது அமுலுக்கு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, TVK கட்சித் தலைவர் விஜய் கடும் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில். டெல்லி வட்டாரங்களில் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை. அவர் தமிழக மக்களை மத மாற்றம் செய்யவே புதுக் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கடுமையாக சாடியுள்ளார்.

விஜய் அரசியல் பிரவேசம் ஆன பின்னர், முதன் முறையாக அவர் மதத்தை வைத்து அவரை அட்டாக் செய்யும் தலைவர் அர்ஜுன் சம்பத் தான். இந்து மக்கள் கட்சி என்ற ஒரு மத சார்புக் கட்சியை நடத்திக் கொண்டு, அதன் தலைவராக உள்ள அர்ஜுன் இப்படி கொஞ்சம் கூட வாய் கூசாமல் பேசியுள்ள விடையம், தற்போது வட நாட்டில் இருந்து, விஜய்க்கு கிளம்பியுள்ள எதிர்பை உணர்த்தி நிற்கிறது.

இன்னும் போகப் போக இதுபோன்ற பல அவதூறுகளை விஜய் சந்திக்க நேரிடும், அவற்றை எல்லாம் வெற்றிகரமாக விஜய் கடந்து விடுவார் என்று அவரது கழகத் தொண்டர்கள் கூறுகிறார்கள்.