டுபாயில் ரெம்ப ரொமான்ஸ் மூடில் ஆர்யா-சாயிஷா வெளியிட்ட புகைப்படம்

Spread the love

நடிகை சாயிஷா தனது கணவர் ஆர்யாவுடன் துபாயில் ரொமான்ஸ் மூடில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவு செய்துள்ள நிலையில் இந்தப் புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது. தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று ஆர்யா – சாயிஷா என்பதும் இந்த ஜோடி கடந்த 2019 ஆம் ஆண்டுத் திருமணம் செய்து கொண்டனர் என்பது தெரிந்ததே. ஆர்யா – சாயிஷா தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பதும் தன்னுடைய மகளின் புகைப்படங்களை அவ்வப்போது சாயிஷா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை சாயிஷா சற்றுமுன் துபாயில் தனது கணவர் ஆர்யாவுடன் ரொமான்ஸ் மூடில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படம் பதிவு செய்து ஒரு மணி நேரமே ஆகிய நிலையில் சுமார் 50 ஆயிரம் லைக்ஸ்களை குவித்துள்ளது

நடிகை சாயிஷா சமீபத்தில் வெளியான ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமடைந்தார் என்பது அந்தப் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் ஆர்யா தற்போது முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ’காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.