பதாதையை வைத்திருக்கும் நபர் 15 வயது சிறுமியை கற்பழித்தார் ! லண்டனில் மாறவுள்ள சட்ட திட்டங்கள்

பதாதையை வைத்திருக்கும் நபர் 15 வயது சிறுமியை கற்பழித்தார் ! லண்டனில் மாறவுள்ள சட்ட திட்டங்கள்

அகதிகள் ஒன்றும் கிருமினல் இல்லை ! என்ற பதாதையோடு, லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட நபர், 15 வயது சிறுமியை கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கொங்கோ நாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய மெயிலா என்ற நபர், பிரிட்டனில் வந்து அகதிகள் அந்தஸ்த்தைக் கோரினார். இருப்பினும் அதில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்று, உள்துறை அமைச்சு நிராகரித்தது. அவரை நாடு கடத்த ஹீத் ரூ ஏர்போட்டுக்கு கொண்டு சென்றார்கள்.

அங்கே ஏர்-பிரான்ஸ் விமானம் அவரை கொங்கோ நாட்டுக்கு கொண்டு செல்ல இருந்தது. ஆனால் லண்டன் ஏர் போட்டில் வைத்தே கையை அவர் காயப்படுத்திக் கொண்டார். இதனால் ஏர்- பிரான்ஸ் அவரை விமானத்தில் ஏற்ற மறுத்தார்கள். காயமடைந்து இருக்கும் ஒரு நபரை ஏற்றிச் செல்வதா இல்லையா என்பதனை, விமான ஊழியர்களே முடிவெடுக்க வேண்டும். இன் நிலையில் பிரான்ஸ் விமானம் அவரை கொண்டு செல்ல மறுத்த காரணத்தால். மீண்டும் தடுப்பு நிலையம் சென்றார்.

அதன் பின்னர் மீண்டும் ஒரு திறமையான வக்கீலை வைத்து, வழக்கை தொடர்ந்தார் மெயிலா. இதனை அடுத்து தடுப்பு முகாமில் இருந்து வெளியே சென்று தற்காலிகமாக வாழலாம் என்று நீதிபதிகள் அனுமதி கொடுத்தார்கள். இவ்வாறு வாழ்ந்து வந்த நிலையில், 15 வயதுப் பெண் ஒருவருக்கு போதைப் பொருட்களை கொடுத்து அடிமையாக்கி. அந்தச் சிறுமியை பல தடவை, கற்பழித்துள்ளார் மயிலா. ஒரு கட்டத்தில் அத்துமீறல் காட்டுமிராண்டித் தனமாகச் சென்றதால். குறித்த சிறுமி பெற்றோருக்கு சொல்ல, அவர்கள் பொலிசாருக்கு முறைப்பாடு செய்தார்கள்.

பொலிசார் மயிலாவை கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளார்கள். அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு குறைந்த பட்ச தண்டனையை பெற திட்டம் தீட்டினார். ஆனால் இவரது கடந்த கால வாழ்கையை தெளிவாக அறிந்துகொண்ட நீதிபதிகள், மயிலாவுக்கு 25 வருட தண்டனையை வழங்கியுள்ளார்கள். மிகவும் வைரலாக மீடியாவில் இந்த விடையம் பரவி வருவதால். MPக்கள் மற்றும் அமைச்சர்கள். சட்ட திட்டங்களை உடனடியாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கைகளை முன் நிலைப்படுத்தி வருகிறார்கள்.

மக்களும் பெரும் அதிருப்த்தி அடைந்துள்ளார்கள். பிரிட்டனை பொறுத்தவரை ஈழத் தமிழர்கள், இந்தியர்கள் அதிலும் சீக்கியர்கள் மற்றும் குஜராத்திகள் போன்ற சில இன மக்களே, அகதிகளாக வந்தாலும், ஒரு நல்ல நிலையில் தம்மை நிலை நிறுத்தி உள்ளார்கள். மேலும் சொல்லப் போனால், ஆங்கிலேயர்களை விட மிகவும் செல்வந்தர்களாகவும் , நாகரீகமான மக்களாகவும் இருந்து வருகிறார்கள், என்பது மிக மிக பெருகைக்கு உரியவிடையம்…