
நடிகை பிரபாஸுக்கு பிரபல நடிகையுடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது!
பிரபல தெலுங்கு நடிகரான பிரபாஸ் டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். வர்ஷம் என்ற 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் இவர் புகழடைந்தார். தொடர்ந்து மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது வெற்றிப் படங்கள்.
அதன் பின்னர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுக்க பேமஸ் ஆனார். பாகுபலி, மற்றும் பாகுபலி 2 படமானது இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இவர் அனுஷ்கா ஷெட்டியை காதலித்து வருவதக கிசுகிசுக்கபட்டு வந்த நிலையில் தற்போது பிரபல இந்தி நடிகை கிருத்தி சனோன் உடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் மாலத்தீவில் அடுத்த வாரம் இவர்களுக்குத் திருமணம் என்றும் சமீபத்திய செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது.


