
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் சுஜா வருணி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வருகிறார். சில படங்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடும் அவர் படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
அதன்படி மிளகா, கிடாரி, பென்சில் போன்ற படங்களில் சுஜா வருணி நடித்திருக்கிறார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார். அந்நிகழ்ச்சிக்கு பின்னர் தனது நீண்ட நாள் காதலரான நடிகர் சிவாஜியின் பேரனான சிவாஜி தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அத்வைத் என்ற மகன் இருக்கிறான்.
அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் சுஜா வருணி தற்போது தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட அழகான போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதில் அவரது மகன் கிடுகிடுவென வளர்ந்து கியூட்டாக இருப்பதை பார்த்து லைக்ஸ் குவித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.





