
விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூர பூவே என்ற சீரியலின் மூலம் நடிக்கத் தொடங்கினார். அதனை தொடர்ந்து அதே சேனலில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்தார்.
அதன் பின் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சன்னி லியோன் நடித்த “ஓ மை கோஸ்ட்” என்ற படத்தில் சதிஷ்க்கு ஜோடியாக நடித்தார்.
தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் வித வித கவர்ச்சி உடையணிந்து புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது சிம்பிளான உடையில் வீடியோ எடுத்து பதிவுசெய்து ரசிகர்களை கவருகின்றார்.


