பிக்பாஸ் அபினவ் மனைவியை திடீரெனக் காணவில்லை பொலிசார் வலைவீச்சு

Spread the love

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிநவ் என்பவரின் மனைவி அபர்ணா திடீரென தலைமறைவாகியுள்ளதை அடுத்து அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் பேரனுமான அபிநவ் என்பவரின் மனைவி அபர்ணா. இவர் சென்னையில் ஜவுளி கடை ஒன்றை வைத்துள்ளார். இந்த கடைக்கு சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த மஞ்சு என்பவர் ஜவுளி ஆடைகளை வடிவமைத்து தருகிறார்.

இந்த நிலையில் மஞ்சு தனது மகள் 12-ஆம் வகுப்பு படித்துவிட்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அவர் விரும்பக்கூடிய கல்லூரி கிடைக்கவில்லை என்றும் அபர்ணாவிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அபர்ணா தனக்கு தெரிந்த ஒரு நண்பர் ஒருவர் இருக்கிறார், அவரிடம் 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் நாம் கேட்கும் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்றும் முன்பணமாக 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய மஞ்சு, அபர்ணா கூறிய நண்பரின் வங்கிக்கணக்கிற்கு ரூபாய் 5 லட்சம் அனுப்பி உள்ள நிலையில் இரண்டு நாட்களில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டதாக சான்றிதழ் ஒன்றை அபர்ணா மஞ்சுவிடம் கொடுத்துள்ளார். அந்த சான்றிதழை மருத்துவ கல்லூரி எடுத்துச் சென்றபோதுதான் அது போலி என்று தெரியவந்தது. இதனை அடுத்து மாம்பலம் போலீசில் மஞ்சு புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் அபர்ணா மற்றும் அவருடைய நண்பர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீரென அபர்ணா ஜவுளிக்கடையை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டதாகவும் அவரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.