பிக்பாஸ் பாலாஜிக்கு திடீர் திருமணம்… ஷிவானி தான் மணப்பெண்?

பாலாஜி

ஆண் அழகனாகவும் மாடல் அழகனாகவும் தனது கெரியரை துவங்கியவர் பாலாஜி முருகதாஸ். இவர் முதன் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அதற்கு முன் இப்படி ஒருத்தர் இருக்கிறார் என்பது யாருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் அவர் தொடர்ந்து தனது ஆசை தனது லட்சியமான மாடலிங் துறையில் தொடர்ந்து தனது முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

சில பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும் அது பெரிதாக அவரை அறிமுகப்படுத்தவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். குறிப்பாக பிக் பாஸ் சீசன் 4ல் இவர் டைட்டில் கைப்பற்ற முடியாமல் போனது. ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி டைட்டில் வென்றார்.

பிக் பாசில் போட்டியாளராக பங்கேற்ற சிவானியுடன் அவர் நெருக்கமாக பழகி காதலித்து வந்தார். அப்போது ஷிவானியின் அம்மா எச்சரித்ததால் பாலாஜி சற்று ஓதுங்கியிருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகும் தொடர்ந்து பிறந்தநாள் பார்ட்டி , நைட் பார்ட்டி உள்ளிட்டவற்றில் சிவானி மற்றும் பாலாஜி நெருக்கமாக அவ்வப்போது சந்தித்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகும்.

இதனால் இவர்கள் உண்மையிலேயே டேட்டிங் செய்து வருகிறார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது பாலாஜி முருகதாஸுக்கு திடீரென திருமணம் நடைபெற்றுள்ளது. ஆம் இவரது திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவ சிவானி தான் மணப்பெண்ணா?என பலரும் கேட்க துவங்கி விட்டார்கள் .ஆனால் உண்மையில் ஷிவானியும் இல்லை. இது உண்மையான திருமணமும் இல்லை. இது ஏதேனும் விளம்பரத்திற்காக அல்லது ப்ரோமோஷன் எடுக்கப்பட்ட வீடியோ என நெட்டிசன் பலவராக கருத்து கூறும் வருகிறார்கள்.