வாரி கொடுக்கும் வாய்ப்பு… பூர்ணிமாவுக்கு வாழ்க்கை கொடுத்த பிக்பாஸ் !

வாரி கொடுக்கும் வாய்ப்பு… பூர்ணிமாவுக்கு வாழ்க்கை கொடுத்த பிக்பாஸ் !

தமிழ் சினிமாவில் பல்வேறு குறும்படங்களில் நடித்தும் youtube இல் வெளியான பல தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை பூர்ணி. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. 7வது சீசனில் பங்கேற்ற பூரணிமா 96வது நாளில் 5 லட்சம் ரூபாய் பணப்பெட்டியோடு பிக்பாஸில் வெளியேறினார்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பூர்ணிக்கு பல்வேறு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருக்கிறது தொடர்ச்சியாக அவர் பல படங்களில் கமிட் ஆகியும் வருகிறார். பிரபல நடிகர் ஒருவர் நடிப்பில் உருவாகும் புதிய இணைய தொடரில் தற்போது நடிக்க பூர்ணிமா ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுதவிர ஏற்கனவே இவர் “வளையம்” என்கிற படத்தை இயக்கியுள்ள பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் “லிங்கம்” என்கிற இணைய தொடரில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதில் நடிகை கதிர், திவ்யபாரதி நடிக்க உள்ளனர்.இது ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.