என் கணவர் 4 வருஷம் வேறொரு பெண்ணுடன் தகாத உறவு… உடைந்து அழுத சம்யுக்தா

என் கணவர் 4 வருஷம் வேறொரு பெண்ணுடன் தகாத உறவு… உடைந்து அழுத சம்யுக்தா

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியான விஜே பாவனாவின் நெருங்கிய தோழியான சம்யுக்தா மாடல் அழகியாக இருந்து அதன் மூலம் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சியில் மூலம் மிகப்பெரிய அளவில் தமிழ் மக்கள் இடையே பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும். பார்ப்பதற்கு இளமையான தோற்றத்தில் மாடல் அழகியாக ஸ்லிம் பிட் தோற்றத்தில் இருந்ததாலே வெகு சீக்கிரத்திலேயே தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். இவருக்கு அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் சம்யுக்த பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டு வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறார். அப்போது மகனுடன் எடுத்துக் கொள்ளும் சில அழகான க்யூட்டான வீடியோக்களை வெளியிடுவார் . கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து மகனுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கணவரை ஏன் பிரிந்தேன்?என்ன காரணம்? எதற்காக விவாகரத்து செய்தேன் என்பது குறித்த பல விஷயங்களை மிகவும் எமோஷனலாக பகிர்ந்து கொண்டார் சம்யுக்தா. அதாவது, கொரோனா பரவல் காலக்கட்டத்தில் என்னுடைய கணவர் துபாயில் வேறொரு பெண்ணுடன் 4 வருடமாக உறவில் இருந்துள்ளார் என்பது எனக்கு தெரிய வந்தது.

4 வருடமாக கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தெரிந்ததும் எனக்கு அதிர்ச்சியானது. இதனை என் நெருங்கிய தோழியான பாவனாவிடம் சொல்லி எனக்கு என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினேன். அந்த நேரத்தில் பாவனா எனக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல் அவர் தான் சிபாரிசு செய்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பினார் என்று சம்யுக்தா எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.